CSKvsRCB | பெங்களூர் பேட்டிங், பழி தீர்க்குமா? சென்னை அணி!
18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி சார்பில், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, சாம் கரன், ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் பெங்களூர் அணியில், ரஜத் படிதார்(கேப்டன்), விராட் கோலி, சால்ட், தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்) டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் விளையாட உள்ளனர்.
கடந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேற முடியால் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தியது, இந்த நிலையில் சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.