CSKvsPBKS | சென்னை அணி பேட்டிங் - தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைக்கு(ஏப்.30) தோனி தலைமையிலான சென்னை அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 5 வது இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது. தொடர் தோல்வியில் இருந்து சென்னை அணி மீண்டு வருமா? என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து முற்றிலுமாக வெளியேறக் கூடிய நிலை உள்ளது.
இந்த சூழலில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி பிளேயிங் லெவன் :
ஆயுஷ் மத்ரே, ஷேக் ரஷீத், சாம் கரன், டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
பஞ்சாப் அணி பிளேயிங் லெவன் :
பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் , நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங் , மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா உமர்சாய், சூர்யான்ஷ் ஷேட்ஜ் , ஹர்பிரீத் பிரார், யுஸ்வேந்திர சாஹல் , அர்ஷ்தீப் சிங்.