#CSKvsMI - சென்னைக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை அணி!
இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி இரண்டாவது போட்டி ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. தொடர்ந்து 3வது போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் அனைவருக்கும் விருப்பமான சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி சென்னையின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது. முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அபாரமாக பந்துவீசி நூர் அஹமது 4 விக்கெட்டுகளும், கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 156 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.