For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#CSKvsLSG - டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு!

07:36 PM Apr 23, 2024 IST | Web Editor
 cskvslsg   டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கில்  வெற்றி பெற்றுள்ளது. மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. 5 வது வெற்றியை யார் பதிவு செய்ய போவது என்ற முனைப்புடன் இன்று இரு அணிகளுடன் களம் இறங்கியுள்ளது.

சென்னை அணி தனது கடைசி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் வெற்றியை பதிவு செய்ய பேட்டிங்கில் இன்று சொந்த மைதானத்தில் களம் இறங்கியுள்ளது.

Tags :
Advertisement