CSKvsLSG | சென்னை அணி பந்து வீச்சு - டாப் ஆர்டரில் மாற்றம் செய்த தோனி 2வது வெற்றியை தேடித் தருவாரா?
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இன்று தோனி தலையிலான சென்னை அணி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்கிறது. உத்திர பிரதேசத்தில் நடக்கும் இப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று வெறும் ஒரே ஒரு போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே போல் லக்னோ அணி 6 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸை வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னையில் அணியில், ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் விளையாட உள்ளனர்.
லக்னோ அணி சார்பில், ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.