CSKvsKKR | டாஸ் வென்ற கொல்கத்தா - சென்னை அணி பந்து வீச்சு!
நடப்பு ஐபிஎல் தொடரில் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 2 மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே சென்னை அணி பிளே ஆஃப் கனவை இழந்தது.
ஆனால், கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்பிருப்பதால் மீதமுள்ள 3 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த சூழலில் கொல்கத்தா அணி இன்று(மே.07) சென்னை அணியை எதிர்கொள்கிறது. ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா பிளேயிங் லெவன்:
சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஜிங்க்யா ரஹானே, மனிஷ் பாண்டே, ரிங்கு சிங், அங்க்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
சென்னை பிளேயிங் லெவன்:
ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரெவிஸ், எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பதிரானா.