CSKvsGT | டாஸ் வென்ற சென்னை அணி - குஜராத் அணி பந்து வீச்சு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 67வது போட்டி இன்று(மே.25) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்நடக்கும் இப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ளது.
குஜராத அணி ஏற்கெனெவே 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அதற்கு எதிர்மறையாக சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் முன்னதாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியின் டாஸை வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி பிளேயிங் லெவன்:-
ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, எம்எஸ் தோனி, தீபக் ஹூடா, நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது.
குஜராத் அணி பிளேயிங் லெவன்:-
சுப்மான் கில், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், அர்ஷத் கான், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர்
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.