For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் அடுத்த போட்டிக்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள தோனி | உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!

09:04 AM Mar 30, 2024 IST | Web Editor
ஐபிஎல் அடுத்த போட்டிக்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள தோனி   உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்
Advertisement

ஐபிஎல் தொடரின் தனது 3 வது லீக் ஆட்டத்தை விளையாட விசாகப்பட்டினத்திற்கு வருகை தந்த CSK அணி வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் திரண்ட CSK ரசிகர்கள். 

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : ரம்ஜான் பண்டிகை | பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்!

இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  18.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து மார்ச் 26 தேதி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதி (நாளை) விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வருகை தருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு பெறும் அளவில் திரண்டு இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வரும்போது ரசிகர்கள் அனைவரும் "தல தோனி, தல தோனி, தல தோனி" என அழைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement