ஐபிஎல் ஏலம் 2025 | சிஎஸ்கே அணியில் இடம்பிடித்த தமிழ்நாட்டு வீரர்கள்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் அணியாக சிஎஸ்கே 3 தமிழ்நாடு வீரர்கள் உட்பட 25 வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்துள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. ஒரு அணி குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் பெற்றிருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானாவை தக்கவைத்தது.
5 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஏலத்தில் முதல் நாளில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு வீரர்களை வாங்கியது. 2-ம் நாளில் 13 வீரர்களை வாங்கியது. அதிக தொகையாக அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு வாங்கி அசத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?
குறிப்பாக அதில், 3 தமிழ்நாடு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கத்தில் தமிழ்நாடு வீரர்கள் இடம் பிடித்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இடம்பெறவில்லை. இது, சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய 3 தமிழக வீரர்கள் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். இது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் :
- எம் எஸ் தோனி - ரூ. 4 கோடி
- ருதுராஜ் கெய்க்வாட் - ரூ. 18 கோடி
- பத்திரனா - ரூ.13 கோடி
- சிவம் துபே - ரூ.12 கோடி
- ஜடேஜா - ரூ. 18 கோடி
ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்கள்:
- டெவோன் கான்வே - ரூ 6.25 கோடி
- ராகுல் திரிபாதி - ரூ 3.4 கோடி
- ரச்சின் ரவீந்திரா - ரூ 4 கோடி
- ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ 9.75 கோடி
- கலீல் அகமது - ரூ 4.80 கோடி
- நூர் அகமது - ரூ.10 கோடி
- விஜய் சங்கர் - ரூ 1.2 கோடி
- சாம் கர்ரன் - ரூ 2.4 கோடி
- ஷேக் ரஷீத் - ரூ 30 லட்சம்
- அன்ஷுல் கம்போஜ் - ரூ 3.4 கோடி
- முகேஷ் சவுத்ரி - ரூ 30 லட்சம்
- தீபக் ஹூடா - ரூ 1.7 கோடி
- குர்ஜப்னீத் சிங் - ரூ 2.2 கோடி
- நாதன் எல்லிஸ் - ரூ 2 கோடி
- ஜேமி ஓவர்டன் - ரூ.1.5 கோடி
- கமலேஷ் நாகர்கோடி - ரூ.30 லட்சம்
- ராமகிருஷ்ண கோஷ் - ரூ 30 லட்சம்
- ஷ்ரேயாஸ் கோபால் - ரூ 30 லட்சம்
- வான்ஷ் பேடி - ரூ 55 லட்சம்
- ஆண்ட்ரே சித்தார்த் - ரூ 30 லட்சம்