Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெங்களூருக்கு எதிரான வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியது என்ன?

10:18 AM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement
ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் “என்னுடைய அனுபவங்கள் மூலம் பொறுமையாக முடிவுகளை எடுத்தேன்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட்  தெரிவித்துள்ளார். 
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின.  இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.  பெங்களூரு அணியின் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.  174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
ருதுராஜ் கெய்குவாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல்போட்டியிலேயே அணி வெற்றிபெற்றுள்ளது.  இந்த நிலையில், வெற்றிக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் கூறுகையில்,

“சிஎஸ்கே அணியின் கேப்டன்சி என்பது எனக்கு கூடுதல் பொறுப்பாக தெரியவில்லை. என்னுடைய அனுபவங்கள் மூலம் பொறுமையாக முடிவுகளை எடுத்தேன். பேட்ஸ்மேன்களின் சிறப்பான அணுகுமுறையால் ஆட்டத்தின் வெற்றி எளிதானது.  நிறைய பாசிட்டிவ் எண்ணங்களுடன் எனது கேப்டன்சி பயணத்தை தொடங்கி உள்ளேன்" என்றார்.

Advertisement

Tags :
chennai super kingsCskCSK VS RCBIndian Premier LeagueIPL 2024RCB vs CSKroyal challengers bangaluruRuturaj
Advertisement
Next Article