For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விடுமுறை காரணமாக சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம் - விலைப்பட்டியல் இதோ!

09:31 AM Apr 21, 2024 IST | Web Editor
விடுமுறை காரணமாக சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்   விலைப்பட்டியல் இதோ
Advertisement

வார இறுதி நாள் விடுமுறை தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதுகிறது.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சமைப்பதற்காக மீன் கடைகளிலும், கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தற்போது மீன்பிடி தடைக்காலம் 60 நாட்கள் இருப்பதால், ஒவ்வொரு ஞாயிறுதோறும் திருவிழா போல் காட்சியளிக்கும் காசிமேடு துறைமுகம் கலையிழந்து காணப்படுகிறது. காசிமேட்டில் உள்ள விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீன் பிரியர்கள் ஞாயிறு அன்று மீன் உண்ண வேண்டுமென்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டை பொருத்தவரை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால் பாறை, ஷீலா, சங்கரா உள்ளிட்ட மீன்களில் குறைவாகவே காணப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிகளுக்கு சில்லறை விலையிலும் மீன்களை கூடை கூடையாக வாங்கிச் சென்றனர்.

பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் சில்லரை விற்பனை கடைகள் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் இன்று மீன் சந்தையில் அதிக விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, பால் சுறா உள்ளிட்ட மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், காணங்கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் சராசரி விலையை விட கூடுதலாகவே மீன்கள் விற்கப்படுகிறது.

பெரிய வகை மீன்களான வஞ்சிரம் 1200 முதல் 1500 ரூபாய்க்கும், சங்கரா வவ்வால் 800 ரூபாய்க்கும், பாறை சீலா உள்ளிட்ட மீன்கள் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சிறிய வகை மீன்களின் வரத்தும் அதிகமாகவே காணப்பட்டது. மொத்த விற்பனையாளர்களும் மீன் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதனால் அதிகாலை முதலில் மீன் பிரியர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இன்று மீன்களின் விலை பட்டியல்:

வஞ்சிரம் - ரூ.1200 முதல் 1500
வவ்வால் வெள்ளை நிறம் - ரூ.800
திருக்கை - ரூ.500
சிறிய வவ்வால் - ரூ.600
கொடுவா - ரூ.600
சீலா - ரூ.300
சங்கரா - ரூ.500
பாறை - ரூ.500
இறால் - ரூ.300
நண்டு - ரூ.300
கடமா பெரியது - ரூ.300
நவரை - ரூ.200
காணங்கத்தை - ரூ.200
நெத்திலி - ரூ.200 

Tags :
Advertisement