For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை - ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!

10:30 AM Dec 20, 2024 IST | Web Editor
பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை   ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு தரிசன டிக்கெட் மூலமாக 10 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக உடனடி முன்பதிவு தரிசனம் மூலமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யஅனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று (டிச.19) ஒரு நாளில் 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சாமி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனடியாக மலையிறங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது. இந்த மண்டல காலத்தில் 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement