"மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும்" - எலோன் மஸ்க்!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2022ல் டுவிட்டர் செயலியை வாங்கினார். மஸ்க், டுவிட்டரை வாங்கியது முதலே டுவிட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றுவது, ஆட்குறைப்பு செய்வது என பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' எனும் சாட்பாட்டையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
”சமீபத்திய குரோக்கின் பதிப்பான குரோக்4ஐ பயன்படுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூ என்பவர், ஒரு மலையேற்றத்தின்போது குரோக் 4 கேமராவைக் காட்டி அங்குள்ள தாவரங்களைக் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு குரோக்கும் சரியாக பதிலை அளித்துள்ளது. அடுத்து பூக்கள் குறித்து கேள்வி கேட்க அதுபற்றியும் சரியாக பதிலளித்துள்ளது. மேலும் அந்த நபர், குரோக் 4-யை 'பாக்கெட் பிஹெச்டி' என்று வர்ணித்தார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த எலான் மஸ்க், "உங்கள் கேமராவை எதை நோக்கியாவது காட்டும்போது குரோக் அதுபற்றிய தகவல்களை வழங்கும். என்னுடைய மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூடப் படிக்கக்கூடும்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இதே பணிகளை கூகுல்லென்ஸ் செய்து வரும் நிலையில் கூகுள் லென்ஸுக்குப் போட்டியாக எலோன் மஸ்க், தற்போது குரோக்கை களமிறக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.