நேரில் அழைத்து பாராட்டும் SK மீது எழும் விமர்சனங்கள் - பதிலடி கொடுத்த லப்பர் பந்து இயக்குநர்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த், கமல், விஜய் போன்ற நடிகர்கள், புதிதாக வந்த இயக்குநகள் அல்லது நடிகர்களின் படங்கள் வெற்றியடைந்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ அல்லது சமூகவலைத்தளங்கள் வாயிலாகவோ பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் அண்மை காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக வந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்ற பிறகு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்.
அந்த வரிசையில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படக்குழுவினரை சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்களுக்கு ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ எங்கள மாதிரி ஒரு அறிமுக இயக்குனர் படம் ரிலீஸ் ஆகுறப்போ, இண்டஸ்ட்ரில இருக்குற stars படம் பார்த்துட்டு படத்த பாராட்டி ஒரு tweet-ஒ இல்ல, ஒரு byte குடுக்குறதோ அந்த படத்துக்கு எவ்ளோ periya சப்போர்ட்-னு என்ன மாதிரி அறிமுக இயக்குனர்களுக்கே புரியும்.
https://t.co/9sJMHH75Db pic.twitter.com/Es4YCbgQv4
— Tamizharasan Pachamuthu (@tamizh018) May 20, 2025
SK சார் ரொம்ப நன்றி, நாங்க படம் பாக்க கூப்டதும் வந்து பாத்துட்டு நீங்க சொன்ன வார்த்தைகள் பட promotion -கு மட்டுமில்ல எனக்கும் பெரிய moral support..மீண்டும் ஒரு முறை நன்றி எனக்காக மட்டுமில்ல சார் என் போன்ற நிறைய அறிமுக இயக்குநர் சார்பாகவும்” என்று தெரிவித்துள்ளார்.