Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WT20WC | பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

07:42 PM Oct 06, 2024 IST | Web Editor
Advertisement

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Advertisement

9வது பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையும் படியுங்கள் : INDvsBAN | டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் நிடா தர் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அருந்தாதி ரெட்டி 3 மற்றும் ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 106 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயத்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ள இந்தியா அணி, அடுத்து வரும் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது.

Tags :
6 wicketsCricketDefeatedICC WomenT20 World Cupindian teamNews7Tamilnews7TamilUpdatespakistanwin
Advertisement
Next Article