Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்தார்!

08:21 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

38 வயதான தினேஷ் கார்த்திக் தமிழகத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வருகிறார். ஐபிஎல் ஆரம்பத்தில் தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் இறுதியாக பெங்களூரு அணிக்காக விளையாடி பாராட்டுகளைப் பெற்றார்.

கிரிக்கெட் விளையாடுவதுடன் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். 94 ஒருநாள் போட்டிகளில் 2392 ரன்களும், 26 டெஸ்ட் பொட்டிகளில் 1025 ரன்களும் 60 டி20களில் 686 ரன்களும் எடுத்துள்ளார்.

நடந்த முடிந்த ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக ஆடிய தினேஷ் கார்த்திக் சிறந்த பங்களிப்பைச் செய்தார். டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணித் தேர்வில் அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பு அறிக்கையில், “கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது. என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சார்ந்திருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் நீண்ட பயணத்தில் உடனிருந்த பயற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வுக்குழுவினர், சக வீரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. ” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
CricketDinesh Karthiknews7 tamilNews7 Tamil Updatesofficially announcesRetirementRoyal Challengers BengaluruTamil Nadu cricketerwicketkeeper-batter
Advertisement
Next Article