For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

WPL 2024 : RCB அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

06:45 AM Mar 03, 2024 IST | Web Editor
wpl 2024   rcb அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இதையும் படியுங்கள் : “பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் நடப்பு ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 44 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம்  மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அமெலியா கெர் 40 ரன்னும், யாஷ்டிகா பாடியா 31 ரன்னும் எடுத்தனர்.

Tags :
Advertisement