Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்? மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!

09:40 AM Aug 10, 2024 IST | Web Editor
Advertisement

எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயா் எதுவும் கொண்டு வரப்படாது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில்  சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் (கிரீமிலேயர்) என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதாரரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது என்று முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, "எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசணை செய்யப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

அதன்படி,  அண்ணல் அம்பேத்கா் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதாரரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும்."

இவ்வாறு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags :
CreamlayerReservationscstScST RelervationSupreme court
Advertisement
Next Article