For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#CPIM இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்!

06:58 PM Sep 29, 2024 IST | Web Editor
 cpim இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ( 72) சுவாச தொற்று பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :Nandhan | “அடங்கமறுப்போரின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்” – திருமாவளவன் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐஎம் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் காரத், 2005 முதல் 2015 வரை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். 1985 இல் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1992ம் ஆண்டு அரசியல் குழு உறுப்பினரானார்.

Tags :
Advertisement