“கோவிஷீல்டு - லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” - மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
கோவிஷீல்டு தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல் போன்ற பிரச்னை ஏற்படுமென மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர் லட்சுமணன் நடத்திய கலந்துரையாடலின் போது மருத்துவர் பூபதி ஜான் கூறியதாவது,
“கோவிஷீல்டு தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்தம் உறைதல் ஏற்படலாம். கோவிஷீல்டு தடுப்பூசியால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசி போட்ட எல்லா நபர்களுக்கும் இது போன்ற பிரச்சனை வரும் என்ற ஒரு தோற்றம் உருவாக்கியது. அது மிகவும் தவறு. இந்தியாவில் மட்டும் 180 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியினால் ரத்தம் உறைதல், தட்டனுக்கள் குறைந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தடுப்பூசியின் வீரியம் ஒரு வருடம் மட்டும்தான் இருக்கும். தடுப்பூசி செலுத்திய 4 நாட்களில் இருந்து 40 நாட்களில் மட்டுமே பக்கவிளைவு ஏற்படும். Covaction தடுப்பூசியில் இது போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ததால் தெரியும்”
இவ்வாறு தெரிவித்தார்.