Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு - நீதிபதி அல்லி உத்தரவு!

04:27 PM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை அமலாக்கத் துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு,  ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிக்சையும் நடைபெற்றது.  தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு நீதிமன்றக் காவல் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

மேலும், அவர் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அதனை தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:“பூட்டு, சாவி, சுத்தியல்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி!

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (நவ.22) நிறைவடைந்த நிலையில், தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள  அவர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்த நிலையில்,  அவரது நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.  மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது 11-ஆவது முறை என்பது குறிப்பிட்டதக்கது.

Tags :
DMKNews7Tamilnews7TamilUpdatesSENTHILBALAJITamilNadu
Advertisement
Next Article