Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்கு எண்ணிக்கை - தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

10:41 AM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறும் நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு முடிவடைந்து சுமார் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளதாவது :

"வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுதினம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால்,  விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்"

இவ்வாறு அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :
Election2024ElectionswithNews7tamilLokSabhaElections2024TANGEDCOTNEBVoteCounting
Advertisement
Next Article