Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.68 கோடி மோசடி செய்ததாக #KarnatakaCM சித்தராமையா மீது மேலும் ஒரு புகார்!

12:03 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை பரப்புவதற்கான கட்டணமாக ரூ. 68.14 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்தாமல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏமாற்றி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஆர்என். ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பெங்களூரு எம்எல்ஏக்கள், எம்பிக்கான சிறப்பு நீதிமன்றத்தில் என்ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

“கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரையிலான சித்தராமையாவின் ஆட்சியில், பெங்களூரு மாநகராட்சியின் பேருந்து பணிமனைகளில் அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை பரப்புவதற்கான கட்டணமாக ரூ. 68.14 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால், அந்த கட்டணத்தை முதலமைச்சர் சித்தராமையா செலுத்தாமல் இருந்தார். சொத்து வரி, வரைபட ஒப்புதல் கட்டணம், வர்த்தக உரிமக் கட்டணம், சாலை தோண்டுதல் கட்டணம், விளம்பரக் கட்டணம் முதலானவை மூலம் கிடைக்கும் வருவாய் ஆதாரங்களைக் கொண்டுதான், அந்தந்த துறைகளின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பூங்காக்கள், தெரு விளக்குகள், சேதமடைந்த சாலைகள் பராமரிக்கப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்நிலையில் தான் கர்நாடக அரசுக்கு சித்தராமையா மொத்தம் ரூ. 12.98 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று, அப்போதைய பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு நிதி ஆணையர் 2017 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் தேதியில் கோரிக்கை அறிவிப்பு விடுத்திருந்தார். இருப்பினும், ஆணையரின் கோரிக்கையை சித்தராமையா அரசு புறக்கணித்து விட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த கட்டண மோசடி புகாரை, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த சித்தராமையா அரசு முற்றிலும் மூடி மறைத்து விட்டது.

அதாவது சித்தராமையா அரசின் அழுத்தம் காரணமாக, எந்த அறிவிப்பும் இல்லாமல் 68.14 கோடி ரூபாய் மோசடி புகாரை, லோக் ஆயுக்தா காவல்துறை 2024 ஆம் ஆண்டில் ஜூலை 26 ஆம் தேதியில் முழுவதுமாக மூடியது. இந்த நடவடிக்கையை எதிர்த்துதான், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு தனியார் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா மற்றும் இதில் தொடர்புடைய பிறருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தனியார் புகார் பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Tags :
BJPcorruptionRN RameshSiddaramaiah
Advertisement
Next Article