For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருநெல்வேலி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்..!

07:25 AM Jan 31, 2024 IST | Web Editor
திருநெல்வேலி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்
Advertisement

திருநெல்வேலி மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்று இரவு 10மணி வரை நீடித்தது.

Advertisement

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில்
நேற்று (ஜன.30)-ம் தேதி மாலை 4.45 மணியளவில் மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் துவங்கியது.  வழக்கமாக கூட்டம் துவங்கிய உடன் தீர்மானம் 1 முதல் 22, தீர்மானம் 23 முதல் 85 வரை என்று வாசித்துவிட்டு ஒரு சில தீர்மானத்தின் மீது மட்டும் விவாதம் நடைபெறும்.

பொதுவாக இது போன்ற கூட்டம் சுமார் 1 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்தில் நிறைவு பெற்றுவிடும்.  ஆனால் திருநெல்வேலி மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக இந்த கூட்டம் மாலை துவங்கி இரவு வரை சுமார் 5 மணி நேரமாக நடைபெற்றது.  திமுக மாமன்ற உறுப்பினர்களே, ஆளும் கட்சி மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்திருந்தனர்.

இதன் காரணமாக மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.  நேற்று (ஜன.30)  நடைபெற்ற மாமன்ற சாதாரண மற்றும் அவசர கூட்டத்தில் கூட்டம் துவங்கிய போது மாமன்ற உறுப்பினர்கள் 3 பேர் தங்கள் வார்டுகளில் பணிகளை நிறைவேற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் அல்வா கொடுத்து வருவதாக கூறி தட்டில் அல்வாவுடன் வந்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர், ஆணையாளர் முன்பாக தரையில் அமர்ந்து பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.   அதனை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகு ஒவ்வொரு தீர்மானமாக வாசித்து நிறைவேற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர்.  இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதையும் படியுங்கள்: நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

பின்னர் இரவு 8 மணியளவில் 15 நிமிடங்கள் உணவு இடைவெளி அளிக்கப்பட்டது.  பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளுக்கு அனுமதி வழங்கி உடனடியாக பணிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒரு வழியாக இரவு 10 மணியளவில் அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கைகளையும் தெரிவித்த பிறகு, நேரம் கருதி 102 தீர்மானங்களும் தனித்தனியாக வாசிக்க வேண்டாம். ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த 10 தீர்மானங்களை ஒத்தி வைக்க வேண்டும், 3 தீர்மானங்கள் ரத்து செய்ய வேண்டுமென அனைத்து மாமன்ற
உறுப்பினர்களும் கையொப்பமிட்டு 4 மண்டல தலைவர்கள் மனுவை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர்.

இறுதியாக பேசிய மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் "55 வார்டுகளிலும் இதுவரை மாநகராட்சியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் எத்தனை? எவ்வளவு மதிப்பீடு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்" என அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைத்தார்.

மேலும் "இது மன்னராட்சி அல்ல மக்களாட்சி. 55 வார்டுகளிலும் பாரபட்சம் பார்க்காமல்
பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே கவுன்சிலர்கள் அனைவரின்
எதிர்பார்ப்பாக உள்ளது" என மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ்
தெரிவித்தார்.

Tags :
Advertisement