கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!
குன்னூர் சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் 30
ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல்
பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர்
சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கோடை சீசனுக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்த பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
இதையும் படியுங்கள் : திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!
இதனைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ்பூங்காவிலும் பல்வேறு விதமான மலர் செடிகள் நடவு செய்யும் பணி தோட்டக்கலைத்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி பங்கேற்று மலர் செடிகள் நடவு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாத்திகளில் மலர் செடிகள் நடவு பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வரும் மே மாதம் கோடை சீசனில் சிம்ஸ் பூங்காவில் 64வது ஆண்டு பழ கண்காட்சியையொட்டி 30 வகைகளில் 130 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளன.
சால்வியா மேரி கோல்டு, காஸ்மாஸ் , டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின் உட்பட
பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. மேலும், அமெரிக்கா, ஜப்பான் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 125 வகை மலர் நாற்றுக்கள் நடவு செய்ய தயார் செய்யப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.