ஹைதராபாத்தில் தொடங்கியது ‘கூலி’ படப்பிடிப்பு!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று (ஜூலை 5) தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, நடிகர் ரஜினி நேற்று (ஜூலை 4) சென்னையிலிருந்து ஹைதராபாத் கிளம்பினார்.
Superstar-Loki Sambhavam begins! 🔥 #Coolie shooting starts today 💥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @Dir_Chandhru pic.twitter.com/Cq49chKVIi
— Sun Pictures (@sunpictures) July 5, 2024
அதன்படி, இன்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒருவார காலத்திற்கு மட்டும் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதன்பிறகு, வரும் 10-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இதற்காக, பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் முக்கிய காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனும் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.