For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#coolie திரைப்படத்தின் புதிய போஸ்டர் | அது என்ன 1421 - எகிறும் எதிர்பார்ப்பு!

04:31 PM Sep 04, 2024 IST | Web Editor
 coolie திரைப்படத்தின் புதிய போஸ்டர்   அது என்ன 1421   எகிறும் எதிர்பார்ப்பு
Advertisement

'கூலி' திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இதில் உள்ள குறிப்பட்டை எண் தங்க வகையை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய அப்டேட்டாக கதாபாத்திர அறிமுகங்கள் குறித்து போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திராவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. அண்மையில் இப்படத்தில் நடிக்கும் ரஜினி உள்பட முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையே, இந்த திரைப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இதையும் படியுங்கள் : ஹரியானா தேர்தலில் போட்டியா? #RahulGandhi உடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா திடீர் சந்திப்பு!

இதற்கிடையே, போஸ்டரில் ரஜினி கையில் வைத்திருக்கும் குறிப்பட்டை ஒன்றில் 1421 என்கிற எண் இடம் பெற்றுள்ளது. இது என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன. கூலி திரைப்படம் முழுக்க முழுக்க தங்கக் கடத்தலை மையமாகக்கொண்டே உருவாகி வருவதால், 14 மற்றும் 21 என்பது தங்க கேரட்களைக் குறிப்பிடுவதாகவே தெரிகிறது. குறிப்பாக, 14 கேரட் இந்தியா, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு உரியவையாகவே பார்க்கப்படுகின்றன. 21 கேரட் என்பது சௌதி உள்ளிட்ட அமீர நாடுகளில் அதிக பயன்படுத்தும் தங்க வகை.

கூலி படத்தின் அறிவிப்பு விடியோவில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களும், கடிகாரங்களுமே அதிகம் இடம்பெற்றுள்ளன. அதேபோல் துபை, கத்தார் உள்ளிட்ட அமீர நாடுகளிலிருந்தே இந்தியாவுக்கு அதிகமாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுகின்றன. இதைக் குறிப்பிடும் விதமாகக் கூட 21 எண் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement