ரஜினியின் ‘கூலி’ - சூர்யாவின் ’ரெட்ரோ’ படங்கள் ஒரே நாளில் வெளியாகிறதா?
நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படமான கூலியும், நடிகர் சூரியா திரைப்படமான ரெட்ரோவும் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதுமா என்ற எதிர்பார்ப்பு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் படபிடிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ரஜினி மற்றும் மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா இப்படத்தில் இடம் பெற்றுள்ளார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. தற்போது ஜெய்ப்பூரில் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்புகள் முடிவடைவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல், நடிகர் சூரியா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஜ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பெயர் அறிவிப்பு மற்றும் டீசர் இன்று வெளியானது. டீசரில் இப்படம் கோடையில் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த 2 இயக்குநர்களும் படங்களை இயக்கி வருகிறார்கள். இயக்குநர்களுக்காகவே படங்களை பார்க்காதற்கு ஒரு ரசிகர்கள் பட்டாலத்தையே இவர்கள் உருவாக்கியுள்ளார்கள். அதனால், இரு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்ப் புத்தாண்டை கணக்கில் வைத்து ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.