For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சமையல் பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது" - ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

04:20 PM Jun 08, 2024 IST | Web Editor
 சமையல் பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது    ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்
Advertisement

சமையல் பாத்திரத்தை மூடி வைக்காமல் சமைப்பது உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.  

Advertisement

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:

சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்து சமைப்பது சரியான முறை.  அவ்வாறு சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல்,  ஊட்டச்சத்துக்களை சிறப்பாக தக்க வைக்கவும் உதவும்.  அதே நேரம் பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது அதிக நேரம் எடுப்பதுடன்,  காற்றின் வெளிப்பாடு உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பையும் அதிகரிக்கிறது.  பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை மூடி வைத்து சமைக்கும் போது அவைகளின் நிறம் மாறும்.  ஆனால் ஊட்டச்சத்து இழப்பைக் குறைக்கும்.

உணவை சரியாக சமைப்பது ஏன் முக்கியம்?

செரிமானத்தை மேம்படுத்தவும்,  உணவுப்பொருள்களை மேலும் சுவையாக மாற்றவும், அவற்றின் சுவை,  தோற்றம் மற்றும் அமைப்பை மேம்படுத்தவும் சமையல் முக்கியமானது. மேலும் சில ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு அதிகமாக கிடைக்கவும் உதவுகிறது.  சமைப்பது நுண்ணுயிரிகளைக் கொன்று,  உணவு மாசுபடும் அபாயத்தைக் குறைக்கிறது.

ஆரோக்கியமான சமையல் முறைகள்!

காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் இரண்டின் அளவையும் அதிகரிக்க வேகவைத்தல் சிறந்த முறையாக உள்ளது.  பருப்பு வகைகளை கொதிக்க வைக்கப்பது,  அவற்றின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும்.  ஏனெனில் கொதிக்க வைக்கும் போது ஊட்டச்சத்துக்கு எதிரான காரணிகள் அழிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க மைக்ரோவேவ் சமையல் நல்லதா?

மைக்ரோவேவ் மிகக் குறைந்த அளவு தண்ணீரை எடுத்து,  உணவை உள்ளே இருக்கும் ஆவியில் வேகவைக்கும் என்று ஐசிஎம் ஆர் கூறுகிறது.  இந்த முறை மற்ற சமையல் முறைகளை விட அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெற உதவுகிறது.  ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் கசிவு இல்லை என கூறுகிறது.

Tags :
Advertisement