For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹிந்தி #BiggBoss இல் களமிறங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்!

06:02 PM Oct 07, 2024 IST | Web Editor
ஹிந்தி  biggboss இல் களமிறங்கிய  குக் வித் கோமாளி  பிரபலம்
Advertisement

தமிழ் நடிகை ஸ்ருதிகா ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

Advertisement

`குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஸ்ருதிகா அர்ஜூன். இவர் சூர்யாவுடன் ஸ்ரீ, ஜீவா உடன் தித்திக்குதே, மாதவனுடன் நள தமயந்தி உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்திருந்தார். சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் சின்னத்திரையில் இவர் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோ இவருக்கென தனி அடையாளத்தைக் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18-ல் போட்டியாளராக களம் இறங்கி உள்ளார் ஸ்ருதிகா. நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

வீட்டிற்குள் செல்வதற்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் சொல்லும்படி சல்மான் கானிடம் கேட்டு அவர் சொல்லியதும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்து வெற்றி பெறுவார் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement