தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக #B.Ed தேர்வு வினாத்தாள் கசிவு!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் B.Ed எனப்படும் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 760 கல்வியில் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் B.Ed இரண்டாம் ஆண்டு நான்காம் பருவ தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு தேர்வுகள் நடைபெற்று உள்ள நிலையில், இன்று படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெறுகிறது.
70 மதிப்பெண்களுக்கு நடைபெற இருக்கும் இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே தேர்வர்களிடம் கிடைத்துவிட்டதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 29ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்க வேண்டிய தேர்வுக்கான வினாத்தாள் ஒரு நாள் முன்னதாகவே மாணவர்களுக்கு கிடைத்து விடுவதாகவும், பல்கலைக்கழக பதிவாளரும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் ஒவ்வொரு கேள்வித்தாளையும் விலைக்கு விற்று விடுவதாக கல்வியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : USA சென்றடைந்தார் முதலமைச்சர் #MKStalin – அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
ஏற்கெனவே நடந்த இரண்டு தேர்வுகளுக்கான வினாத்தாளும் இதேபோல் முன்கூட்டியே வெளியிடப்பட்டு தேர்வுகள் முறைகேடாக நடைபெறுவதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். B.Ed எனப்படும் இளநிலை கல்வியியல் பயிலும் மாணவர்களுக்கு பருவ தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பொது பருவத் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னாலே வெளியாகி இருப்பது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தரத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் பதிவாளரும், தேர்வு கட்டுப்பாட்டாளரும் இது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.