For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்ச்சைப் பேச்சு - நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

07:16 PM Nov 05, 2024 IST | Web Editor
சர்ச்சைப் பேச்சு   நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Advertisement

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.

அப்போது அவர் தெலுங்கு மக்கள் தொடர்பாகப் பேசியது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரைக் கைது செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. அதே சமயம் இவர் மீது சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்தியத் தெலுங்கு சம்மேளன இயக்கத்தின் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,  “நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசுவது, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
Advertisement