மத்திய பிரதேசத்தில் தொடர் மழை - கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் ஆறுகள், ஓடைகள் எல்லாம் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அப்போது சுனிதா என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து வந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் அந்த கிராமத்தில் வாகனங்கள் வந்து செல்ல முடியாததால் அந்த ஊர் கிராம மக்கள் சேர்ந்து மாட்டு வண்டியில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சுனிதாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மத்திய பிரதேசம் பெதுலில் கனமழை காரணமாக வழித்தடங்கள் எல்லாம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், அந்த ஊர் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அவர்கள் நீண்ட காலமாகவே பாலம் கட்டிதரக் கோரி கேட்டு வருகின்றனர். மேலும் இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். அவ்வப்போதும் அவர்களுக்கு எந்தப் பலணும் இல்லை.
பின்னர் கர்ப்பிணிப் பெண்ணான சுனிதாவின் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பெதுல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூரியவன்ஷி கடந்த தேர்தலில் கிராம மக்கள் பாலம் அமைத்து தரக்கோரி கேட்டுள்ளனர். அப்போதைய ஆட்சியரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தற்போது மீண்டும் அரசுக்கு கடிதம் எழுதுவோம் எனவும், அந்ந கிராம மக்களின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வோம் எனவும் கூறினார். மேலும் இதுபோன்ற சூழல்களில் மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு எற்பாடுகள் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.