Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் தொடர் கனமழை | கடைகளில் புகுந்த மழைநீர்...

06:33 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது.

Advertisement

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது.  திசையன்விளை பஜார் பகுதியில் முறையான மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழை நீர் புகுந்து பாதிப்புக்குள்ளாக்கியது.

Advertisement
Next Article