Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி; பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலச்சரிவு!

09:51 AM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

தொடர் கனமழை காரணமாக கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

குமரிக்கடல்,  தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

இந்த சூழலில் கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பொய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

அதனை தொடர்ந்து,  திருவனந்தபுரம்,  பத்தனம்திட்டா,  இடுக்கி,  எர்ணாகுளம் , வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,    திருவனந்தபுரத்தில் பொன்முடி போன்ற மலையோர மற்றும் நீர் வீழ்ச்சி சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை தொடர்வதன் காரணமாக  பத்தனம்திட்டா மாவட்டத்தில் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்,  அப் பகுதியில் உள்ள குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
ContinuousHeavyRainKeralalandslideNews7TamilPathanamthitta
Advertisement
Next Article