Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் ரயில் விபத்துகள்.. 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பேர் காயம்!

08:14 AM Jul 30, 2024 IST | Web Editor
Advertisement

ஜார்கண்ட்டின் சக்ரதர்பூர் அருகே ஹவுரா - மும்பை செல்லும் பயணிகள் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை சென்ற எக்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தடம்புரண்டது.  ஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே ரயில் சென்ற போது 14பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்ரதர்பூர் அருகே உள்ள பாரா பாம்பு கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தடம் புரண்டது குறித்து தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரி ஒருவர், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக அடிக்கடி ரயில் விபத்து நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஜார்கண்ட் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ரயில் எண். 12810 ஹவுரா - சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் சக்ரதர்பூர் அருகே பாரபாம்பூவில் இடையே தடம் புரண்டது. 6 பேர் காயமடைந்துள்ளனர். அனைவருக்கும் ரயில்வே மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.” என அறிவித்துள்ளது.

Tags :
AccidentderailHowrah_Mumbai ExpressJharkhandpassenger train
Advertisement
Next Article