Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் தொடர்ந்து காற்று மாசு அதிகரிப்பு! காற்றின் தரக்குறியீடு மாநகர் முழுவதும் 190 - வரை கூடியது!!

10:53 AM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதாகவும், மாநகரின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக் குறியீடு 100-ஐ தாண்டியுள்ளதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து வருவதாலும், போக்குக்குவரத்து  உள்ளிட்ட காரணங்களாலும் சென்னையில் காற்றின் தர குறியீடு அனைத்து இடங்களிலும் காற்று தரக் குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளின் காற்றின் தரக்குறியீடு:

இதைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து காற்றின் தரத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Air pollutionAir Quality IndexChennaiContinued increasenews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article