தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் படி இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 35° – 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° – 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கழுகுகள் உயிரிழப்பு : தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா? – அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!