தொடர் கனமழை - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்த டெல்லி அரசு!
07:00 PM Jun 30, 2024 IST
|
Web Editor
இதேபோல டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் டெல்லியில் 228.1 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. இதற்கிடையே, டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
Advertisement
தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
Advertisement
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வெகுவாக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து கார் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வசந்த் விகாரில் கட்டுமான பணியில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் டெல்லி மாவட்ட பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Article