தொடரும் கனமழை | மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக 5வது நாளாக கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்கம், புதுவையில் படவலாக பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி செல்கின்றனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக 5வது நாளாக கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கடல் சீற்றத்தின் காரணமாக 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 5 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.