காரைக்கால் | தொடர் விடுமுறை - சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
தொடர் விடுமுறையால் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மார்கழி கடும் குளிரிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் சன்னதியில் ஸ்ரீ சனிபகவான் காட்சி அளித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடர் விடுமுறை காரணமாக இன்று (டிச. 28) ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மேலும் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளன. அதிகாலை முதல் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு மஞ்சள், பால், சந்தனம், பஞ்சாமிர்தம் பழ ரசம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் நளதீர்த்தத்தில் தோஷங்கள் நீங்க மார்கழி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசித்தனர். பக்தர்கள் தங்களது தோஷம் நீங்குவதற்காக எள் தீபமேற்றி வழிபட்டனர். அதிக அளவிலான பக்தர்கள் குறைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகரும் நடிகர்மான மனோ குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பிரணாம்பாளை வழிபட்ட மனோ மனம் உருகி அம்பாளை போற்றி மனம் உருகி பாடல் பாடினார். பாடலைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.