For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் கனமழை பாதிப்பு: தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு!

05:10 PM Dec 19, 2023 IST | Web Editor
தொடர் கனமழை பாதிப்பு  தூத்துக்குடி  நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுத் தரப்பில் நிவாரணப் பொருள்கள் வழங்க ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020.

பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

இதையும் படியுங்கள்:  39 மணி நேரமாக மரத்தில் தொங்கியபடி தவித்த 72 வயது விவசாயி – 1 மணி நேரம் போராடி மீட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!

தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:

1. ரா. ஐஸ்வர்யா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830
2. ஓ.ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803
3. எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., தொலைபேசி எண். 9442218000.  அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்:

1. சீ. கிஷன் குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண். 9123575120
2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி எண். 9940440659

இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர்,
பெ.அமுதா, இ.ஆ.ப., செயல்படுவார்.  நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
Advertisement