Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக - ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

04:55 PM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

பிப்.16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து அதிமுகவின் துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கட்சியின் முன்னணியினர் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க கட்சியின் தலைவர் குரலாக பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.

வரும் 16-ம் தேதி, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். வரும் 17-ம் தேதி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், அரக்கோணம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், வரும் 18-ம் தேதி, திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம் மற்றும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKDMKDurai MuruganElection2024general electionParliament Election 2024
Advertisement
Next Article