For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி மறுசீரமைப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
06:30 AM Mar 05, 2025 IST | Web Editor
தொகுதி மறுசீரமைப்பு   முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
Advertisement

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார். மேலும், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Advertisement

இந்த நிலையில், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அதிமுக, காங்கிரஸ், விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.

அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்தன. மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்ற உள்ளதாக தகவல வெளியானது. தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்துக் கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10வது தளத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக ஒவ்வொரு கட்சியின் சாா்பிலும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட உள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. மேலும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் சாா்பில் டெல்லி சென்று தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும் அரசின் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement