நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு - திமுக - மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!
08:01 AM Feb 04, 2024 IST
|
Web Editor
தற்போது வரை காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனையை அண்ணா அறிவாலயத்தில் காலை 11.00 மணி அளவில் நடத்த உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் முதல் கட்ட ஆலோசனையில் மதிமுக-வினர் ஈரோடு, திருச்சி, என இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன், மதிமுக இன்று முதல் கட்ட ஆலோசனை நடத்த உள்ளது.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளையும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
மதிமுக சார்பில் தேர்தல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கழக அவைத் தலைவர் அர்ஜூனராஜ், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி ரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் திமுக தேர்தல் குழுவினரை சந்திக்க உள்ளனர்
Next Article