For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு - இ.யூ.முஸ்லீம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு பிப்.12ம் தேதி அழைப்பு.!

01:03 PM Feb 04, 2024 IST | Web Editor
தொகுதி பங்கீடு   இ யூ முஸ்லீம் லீக்   விசிக  கொமதேக கட்சிகளுக்கு பிப் 12ம் தேதி அழைப்பு
Advertisement

இ.யூ.முஸ்லீம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு திமுகவுட தொகுதி பங்கீட்டிற்காக  பிப்.12ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த  நிலையில் தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று திமுக-வின் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய மதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.

இரண்டு மக்களவை தொகுதி சீட்டுகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு மற்றும் சொந்த சின்னத்தில் போட்டி உட்பட கோரிக்கை வைத்துள்ளதாகவும், திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்ததாகவும் மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறுதிகட்ட ஆலோசனை என்பது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வந்த பிறகு முடிவு செய்யப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து வருகிற 12 தேதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி பங்கீடு குறித்தும் 12 தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 12ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement