ராமர் சிலை பிரதிஷ்டை - பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் என்னென்ன.?
ராமர் கோயில் பிரதிஷ்டையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை திறந்து வைக்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 11 நாட்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடித்து வருந்தார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் பிரதமர் மோடி ராம மந்திரங்களை உச்சரிப்பதோடு, உணவாக பழங்களை மட்டும் இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். இந்த விரதத்தை தொடர்ந்து தான் பிரதமர் மோடி இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிகள் என்னென்ன..?
காலை
- காலை 10.25 - பிரதமர் மோடி அயோத்தி விமான நிலையம் வருகை
- காலை 10.55 - விமான நிலையத்திலிருந்து ராமர் கோயிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகை
- காலை 11.00 - 12.00 - நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. பிரதமர் மோடி கோயிலை சுற்றி பார்வையிட வாய்ப்பு
மதியம்
- பகல் 12.05 - 12.55 - ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு
- பகல் 12.55 - வழிபாட்டுத் தலத்திலிருந்து பிரதமர் மோடி புறப்பாடு
- பகல் 01.00 - 02.00 - அயோத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
- பிற்பகல் 02.10 - குபேர் திலா சிவன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
- 03.30 - பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்