For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நீங்கள் இறந்த பின்னரும் காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை கொள்ளையடித்துவிடும்" - பிரதமர் மோடியின் பேச்சால் மீண்டும் சர்ச்சை

07:51 AM Apr 25, 2024 IST | Web Editor
 நீங்கள் இறந்த பின்னரும் காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை கொள்ளையடித்துவிடும்    பிரதமர் மோடியின் பேச்சால் மீண்டும் சர்ச்சை
Advertisement

"நீங்கள் இறந்து பின்னரும் காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை கொள்ளையடித்துவிடும்" என  பிரதமர் மோடி பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி முதல்கட்டமாக 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து ஏப். 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நடைபெறுகிறது.

நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது. காஷ்மீரின் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக சார்பில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான பிட்ரோடா,  தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது.  ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால்,  அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும்.  55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இது ஒரு சுவாரஸ்யமான சட்டம்.  நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும்.  அனைத்தையும் அல்ல.  உங்கள் செல்வத்தில் பாதியை.  இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.

இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை.  10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால்,  அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும்.  பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது.  எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும்.  விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.  இதனை ஒரு புதிய கொள்கையாக,  புதிய திட்டமாக பார்க்கிறோம்.  இதில் அடங்கியிருப்பது,  மக்களின் நலன்மட்டுமே;  பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல” என்று கூறி இருந்தார்.

பிரதமர் மோடி பேசியதாவது..

“ காங்கிரஸ் தற்போது  'பரம்பரை வரி' விதிக்கப்படும் என்று பேசி வருகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்கப்படும் என காங்கிரஸ் சொல்கிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த வைத்த சொத்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது.

காங்கிரஸ் கட்சி அதையும் உங்களிடமிருந்து பறித்துவிடும். காங்கிரஸின் தாரக மந்திரம் என்னவெனில்  ” உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும்.. நீங்கள் உயிருடன் இல்லாத போதும் ​அது உங்கள் மீது பரம்பரை வரியைச் சுமத்திவிடும்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்ச்சியாக பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் நிலையில் அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பலர் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement