For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"உ.பி-யில் காங்கிரஸ் 11 தொகுதிகளில் போட்டியிடும்" -சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்...!

08:22 PM Jan 27, 2024 IST | Jeni
 உ பி யில் காங்கிரஸ் 11 தொகுதிகளில் போட்டியிடும்   சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

Advertisement

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

சில நாட்களுக்கு முன் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்த நிலையில், 80 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் முதல் கட்சியாக சமாஜ்வாதி கட்சி, தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement