Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

08:26 AM Apr 24, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் 3 நாட்களாக ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,

"மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி ஏப்ரல் 24-ம் தேதி தொடங்க உள்ளார். அங்குள்ள அமராவதி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாபூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவர் பேச உள்ளார் "

இவ்வாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Tags :
Congresselection campaignElection2024Elections2024INDIAAllainceLok Sabha ElectionMaharashtraRahul gandhi
Advertisement
Next Article